தற்போதுள்ள சூழ்நிலையில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்தது.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் முன்னோக்கிச் செல்வது சவாலானது என்று இலங்கை மின்சார சபையின் நிறுவன மூலோபாயம் மற்றும் ஒழுங்குமுறை உறவுகளின் பிரதிப் பொது முகாமையாளர் நிஹால் வீரரத்ன தெரிவித்தார்.
இதுவரை விலை அதிகரிப்பு உட்படாத ஒரே சேவை மின்சாரமே என்று தெரிவித்த அவர், தற்போதைய விலை நிர்ணயத்தை இனியும் பேண முடியாது என்று கூறினார்.
மழை இல்லாததால் ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நீர் மின் உற்பத்தியைப் பேண முடியவில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஏப்ரல் மாதத்தில் குறைவான மழையே எதிர்பார்க்கப்படுகின்றது என்று கூறினார்.
Discussion about this post