அன்பே ஆருயிரே படத்தின் மூலமாக நடிகையாக தமிழில் அறிமுகம் ஆனவர் நிலா. அவர் மருதமலை, ஜாம்பவான் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.
பிரஷாந்த் உடன் ஜாம்பவான் படத்தில் நடித்த போது ஒரு காட்சியில் நிலா அவரது தோழிகள் உடன் குளிப்பது போன்ற காட்சி எடுத்திருக்கிறார்கள்.
குற்றாலத்தில் அந்த காட்சியை படமாக்கியபோது அதில் குளிக்க மறுத்தாராம் நிலா. அப்படி நடிக்க வேண்டும் என்றால் மினரல் வாட்டர் நிரப்புங்கள் என கூறி இருக்கிறார் அவர். அதனால் ஷூட்டிங்கையே நிறுத்திவிட்டார்களாம்.
அதற்கு பிறகு பல பிரச்சனைகள் வந்து, சமரசம் பேசி அந்த காட்சியை வெளிநாட்டில் படமாக்கியதாக இயக்குனர் தற்போது ஓரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
Discussion about this post