கொழும்புப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் மிச்செல் பட்லெட்டை நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
ஜெனிவாவில் தற்போது மனித உரிமைகள் சபையின் 49 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் நிலையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் நகர்வுகள் தொடர்பாக கொழும்புப் பேராயர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் இந்தச் சந்திப்பில் விவரித்தார் என்று தெரியவருகின்றது.
அதேநேரம், கொழும்புப் பேராயர் வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசரையும் சந்தித்திருந்தார்.
Discussion about this post