யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் மாவா போதைப் பாக்கு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 30 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பலசரக்குக் கடை ஒன்றில் மாவா போதைப் பாக்கு விற்பனை செய்யப்படுகின்றது என்று பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 390 கிராம் மாவா போதைப் பாக்குக் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post