மாலைத்தீவுகளின் வௌிவிவகார அமைச்சர் மூஸா சமீர் (Moosa Zameer) எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை இலங்கைக்கான விஜயத்தில் ஈடுபடவுள்ளார்.
இதன்போது, அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மூஸா சமீர் உள்ளிட்ட இராஜதந்திரிகள் குழு, வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.
Discussion about this post