மாற்றத்திற்கான மாற்று வழி தொடர்பாக திறந்த உரையாடல் ஒன்றுக்கு தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் (V.S.Sivaharan) கோரிக்கை விடுத்துள்ளார்.குறித்த கலந்துரையாடலானது நாளைய தினம் (28) வவுனியா (Vavuniya) வாடி வீட்டில் காலை 10 மணிக்கு இடம்பெற உள்ளது.
தொழில் முறை அரசியல்இந்த கலந்துரையாடலில் வடகிழக்கு பகுதியில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியியலாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், அரசியல் ஆர்வலர்கள், குறிப்பாக மாற்றத்தை விரும்பும் இளையோர்கள் அனைவரையும் கருத்துப்பகிர்வில் கலந்து கொள்ளுமாறு திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “கடந்த பல தசாப்தமாக தொழில் முறை அரசியல்வாதிகளால் தமிழ்த்தேசிய அரசியலை விடுதலை அறவுணர்வின்றி தமிழ் மக்களின் நீண்ட கால இருப்பு பற்றிய தொலைநோக்கு சித்தாந்தமின்றி தேர்தல் வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு வலிமையான கோட்பாடின்றி கட்சி கட்டமைப்புகளிலும் மாற்றமின்றி அறிவார்ந்த அணுகுமுறை இன்றி தமது நலன் சார்ந்து தொடர்ந்து செயல்படுவதால் மக்கள் மத்தியிலே வெறுப்புணர்வு ஏற்பட்டு பல கூறுகளாக பிரிவடைந்துள்ளனர்.
தமிழர் தேசம்
இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு சிங்களத்திற்குள் கரைந்துவிடும் ஆபத்து உண்டு. தமிழர் தேசம், தேசியம் வலு குன்றாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு.
எனவே மாற்றத்திற்கான மாற்று வழி தொடர்பாக திறந்த உரையாடலுக்கு அனைவரையும் கருத்துப்பகிர்விற்கு உரிமையுடன் அழைக்கிறோம்.“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post