பலாங்கொடை பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திடீர் மரண பரிசோதனையின் போது இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜயதிலக தெரிவித்தார்.
திடீர் மரண விசாரணை
கடந்த மூன்று மாதங்களில் 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடையே பதிவாகியுள்ள இறப்புகளில் 70 சதவீதம் மாரடைப்பால் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் மாரடைப்பு காரணமாக மரணமடைவதாக பலாங்கொடை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜதிலக்க தெரிவித்தார்.
இந்நிலையில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு திடீரென வயிறு, நெஞ்சு பகுதியில் எரிச்சல், தலைசுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ரத்தம், ஈசிஜி பரிசோதனை செய்து கொள்வது நல்லது என திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திரா விஜயதிலக் தெரிவித்துள்ளார்.
பலாங்கொடை வைத்தியசாலையின் தெரிவித்துள்ளார்.
Discussion about this post