கனடாவில் கோழி ஒன்று மாம்பழம் அளவை ஒத்த மிகப்பெரிய முட்டையை இட்டுள்ள ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.
கனடாவின் மனிடோபா மாகாணத்தை சேர்ந்த பெண் ஆஷா பார்டெல். இவரது பண்ணைத் தோட்டத்தில் வளர்ந்த கோழியே பாரிய முட்டை ஒன்றை இட்டுள்ளது.
அந்த முட்டையின் எடை மட்டும் 202 கிராம் ஆகும், சாதாரண முட்டையை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாம். கடந்த வியாழன்று அன்று திடீரென சத்தம் கேட்க ஓடிப்போய் பார்த்துள்ளார் ஆஷா, அப்போதே முட்டையை பார்த்தவுடன் ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டார்.
இந்த முட்டைக்குள் இரண்டு மஞ்சள் கரு இருந்ததாகவும், ஒன்று முதல் ஓட்டின் உள்ளேயும், மற்றொன்று முதல் ஓட்டுக்குள் இருந்த தனி முட்டையின் உள்ளேயும் இருந்ததாம்.
ஒரு முட்டை முழுமையாக உருவாகாத போது, மற்றொரு முட்டை அதன்மேலே உருவாகத் தொடங்கியிருக்கலாம், இதனால் பெரிய முட்டை உருவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.
Discussion about this post