ஹெரோய்னுக்கு அடிமையான இளைஞர் ஒருவரால் பதின்ம வயது மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் நடந்துள்ளது.
15 வயது மாணவி 25 வயதான இளைஞர் ஒருவரைக் காதலித்துள்ளார். அவர் ஹெரோய்ன் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பதால் தற்போது அவர்களிடையே தொடர்பு இல்லை என்று கூறப்படுகின்றது.
நேற்றுமுன்தினம் மாலை மாணவியும், சகோதரியும் தனியார் கல்வி நிலையத்தில் வகுப்பு முடிந்து சென்றபோது, அந்த இளைஞர் வீதியில் வீழ்ந்து கிடந்துள்ளார்.
அவரைத் தூக்கி நிறுத்தி அனுப்பி விட்டுப் பின்னே மாணவியும், சகோதரியும் சென்றுள்ளனர். முன்னே சென்று கொண்டிருந்த இளைஞன் திடீரென ஆட்களற்ற நேரம் மாணவியை அங்கிருந்த பாழடைந்த வீடொன்றுக்குள் சென்று பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.
மாணவியின் சகோதரி உடனடியாக சம்பவ இடத்துக்கு வீட்டினரையும், உறவினர்களையும் அழைத்து வந்துள்ளார். அதைக்கண்ட இளைஞன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சந்தேகநபர் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post