15 வயது மாணவி ஒருவரின் வீடியோவை வைத்து மிரட்டி, மாணவியை பாலியஸ் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவி இளைஞர் ஒருவருடன் கைபேசியில் வீடியோ அழைப்பில் உரையாடிய பதிவை வைத்தே இவர்கள் மாணவியை மிரட்டி துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் ஏழாலையைச் சேர்ந்தவர்கள் என்றும் 20 மற்றும் 25 வயதுடையவர்கள் என்றும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாணவி, துவாலையுடன் இளைஞர் ஒருவருடன் கைபேசி வீடியோ அழைப்பில் உரையாடியுள்ளார். அதைப் பதிவு செய்த அந்த இளைஞன், தனது நண்பர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார்.
இளைஞர்களிடம் இந்த வீடியோ பதிவு சிக்கியதையடுத்து அதை வைத்து மிரட்டி இளைஞர்கள் இருவரும் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.
மாணவியின் வீடியோ பதிவு ஏனைய சிலருக்கும் பரவியதை அடுத்து பாடசாலை ஆசிரியர்களுக்கு இந்த விடயம் தெரியவந்தது. அவர்கள் சிறுவர் நன்னடத்தைப் பிரிவினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார், சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
Discussion about this post