கிளிநொச்சி பிரதேசத்தில் மாணவிகள் சிலர் தங்கள் தொடைகளில் ஆங்கில எழுத்துக்களைப் பச்சை குத்தியுள்ளனர் என்று கிடைத்த தகவலை அடுத்து ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்தச் சம்பவம் ஒரு சில வாரங்களுக்கு முன்னர் நடந்துள்ளது என்று தெரியவருகின்றது.
மாணவிகள் தங்கள் தொடைகளில் காதலர்களின் பெயர்களைப் பச்சை குத்தியுள்ளனர் என்று ஆசிரியர்களுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மாணவிகள் விசாரிக்கப்பட்டனர் என்று கூறப்படுகின்றது.
அவர்களின் ஐவரின் தொடைகளில் ஆங்கில எழுத்துக்கள் சூடாக்கப்பட்ட பொருள் மூலம் பதிக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது என்றும், அவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகின்றது.
ஆயினும் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்த முயன்றபோது, பாடசாலை நிர்வாகம் இது தொடர்பில் கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டது.
Discussion about this post