நாடாளுமன்றத்துக்கு அருகே நேற்று மாலை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். அதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.
பேரணியாகச் சென்ற மாணவர்கள் பொலிஸாரின் வீதித் தடைகளை அகற்றி முன்னேறினர்.
அவர்களைத் தடுக்க முடியாத பொலிஸார் ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக கண்ணீர்ப் புகைக்குண்டு மற்றும் நீர்த்தாரைகளைப் பயன்படுத்தினர்.
ஆயினும் மாணவர்கள் அங்கு தொடர்ந்து அமர்ந்திருந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
Discussion about this post