நாட்டில் பல பாடசாலை மற்றும் பல்கலைகழக மாணவர்கள் பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.
பால்வினை நோய்களால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் மருத்துவர் ரசஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் நோய் தொற்று அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இளைஞர்கள் “ஸ்பா” மற்றும் மசாஜ் போன்றவற்றுக்கு செல்வது ஒரு காரணம். ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல யுவதிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post