நாட்டில் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 33 ஆயிரத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 4,238,760 ஆக குறைவடைந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 4,272,289 ஆக காணப்பட்டது.
இந்த தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 33,529ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 31,174 இனால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் ஏனைய பாடசாலைகளில் 2,055 இனால் குறைவடைந்துள்ளது.
அத்துடன் நாடாளவிய ரீதியில் அரச பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 2020 உடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு 994 இனால் வீழ்ச்சியடைந்துள்ளது என்று என இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post