மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்
என அமைச்சர் ரமேஷ் பத்திரனகூறியுள்ளார்.
24 மாநகர சபைகள் / 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக்
காலத்தை நீடித்து நேற்று அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டது.
இவ் விடயம் சம்மாந்தமாக கொழும்பில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை
முடிவுகளை கூறும் சந்திப்பில் அமைச்சரிடம் கேள்வி
எழுப்பப்பட்டது.
தேர்தலுக்கு அஞ்சி ஒரு வருடத்திற்கு பதவிக் காலத்தைஅதிகரிக்க அரசாங்கம்
முடிவெடுத்துள்ளதா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே
அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
Discussion about this post