இலங்கை தேசிய விளையாட்டுப் பேரவை பதவி விலகல் கடிதத்தைக் கையளித்துள்ளது.
விளையாட்டுக் கொள்கை விடயங்களில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காகக் கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் தேசிய விளையாட்டுப் பேரவை நியமிக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன இந்தப் பேரவையின் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தார். இலங்கைக் கிரிக்கெட் அணியின் மற்றொரு முன்னாள் தலைவரான குமார் சங்காரவும் இந்தப் பேரவையில் இணைக்கப்பட்டிருந்தார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகல் கடிதங்களைக் கையளித்துள்ளனர். ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மக்களின் போராட்டங்களுக்கு விளையாட்டு வீரர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தேசிய விளையாட்டுப் பேரவை பதவி விலகல் கடிதத்தைக் கையளித்துள்ளது.
Discussion about this post