மஹிந்த ராஜபக்ஷ மீது அவரின் அண்ணன் சமல் ராஜபக்ச உட்பட உறவினர்கள் சிலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக அறியமுடிகின்றது.
கௌரவமாக பதவி விலகாமல், இழுத்தடிப்பு செய்து, ராஜபக்ச குடும்பத்துக்கே கறுப்பு கரையை ஏற்படுத்திவிட்டே மஹிந்த பதவி விலகினார் என அவர்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் மே 19 ஆம் திகதி உரையாற்றிய சமல் ராஜபக்ச, இந்த விடயத்தை பகிரங்கமாகவே குறிப்பிட்டிருந்தார்.
அரசியலில் விட்டுக்கொடுப்புகளை செய்யவும் பழகியிருக்க வேண்டும், அவ்வாறு இல்லாமல் பதவி ஆசையில் அதனை பற்றி பிடித்திருந்தால் இப்படியான சம்பவங்களையும் சந்தித்தாக வேண்டிவரும் என விளாசித்தள்ளினார்.
ஜனாதிபதி பதவியில் இரு தடவைகள் இருந்த பின்னர் மஹிந்த பதவி விலகாமல், அரசியலில் நீடித்ததால் அவரின் 50 வருடகால அரசியலே நாசமாகிவிட்டதாகவும் கவலை வெளியிட்டிருந்தார் சமல் ராஜபக்ச.
எனினும், தற்போதைய சூழ்நிலையில்கூட அரசியலுக்கு விடைகொடுக்க மஹிந்த ராஜபக்ச தயாரில்லை என்றே கூறப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தலைமைத்துவத்தை வழங்குவார் என அறியமுடிகின்றது.
Discussion about this post