ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கினால் மஹிந்த ராஜபக்சவுக்கு நடந்ததே கோத்தாபய ராஜபக்சவுக்கும் நடக்கும் என்று ஓமல்பே சோபித தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதிய இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதற்குப் பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோது ஓமல்பே சோபித தேரர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் பிரதமராகப் பதவியேற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தேசிய மக்கள் சக்தியும் ரணில் விக்கிரமசிங்கவின் நியமனத்துத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கொழும்புப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் ரணில் விக்கிரமசிங்கவின் நியமனத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
Discussion about this post