பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு மஹிந்த ராஜபக்சவுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே உதய கம்மன்பில இந்த கால அவகாசத்தை வழங்கியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச இந்த வாரத்துக்குள் பதவி விலகாவிட்டால் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post