கொழும்பு, பொரளை விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இல்லத்துக்கு முன்பாகத் தற்போது பெரும் தொகையானோர் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பொதுமக்கள் ஆயிரக் கணக்கில் கூடியுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜபக்ச சகோதரர்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் வலியுறுத்திக் கோசங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
அதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் இன்று அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டங்க்ள நடைபெற்று வருகின்றன.
Discussion about this post