நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில், ஆளும் கட்சியின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்றிரவு அலரிமாளிகையில் நடைபெற்றது.
இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான இந்தக்கூட்டம் இரவு 10.40 மணி தாண்டியும் தொடர்ந்தது.
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் பற்றியும், நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள தொங்கு நிலை பற்றியும் இதன்போது விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளன. அடுத்த கட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
Discussion about this post