பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டையான தங்காலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தங்காலையில் உள்ள மக்கள் மஹிந்தவின் விசுவாசிகளாக இருப்பதாக எப்போதும் தன்னுடன் நிற்பார்கள் என பிரதமர் கூறிவந்தார்.
இந்த நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவு மக்கள் மஹிந்த உள்ளிட்ட குடும்பத்தினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் முறை பல்லாயிரம் மக்கள் இணைந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் பிரதான சட்டதரணிகள் அனைவரும் இணைந்துள்ளனர்.
அதற்கமைய, மஹிந்தவின் கோட்டை இன்று சரிந்துவிட்டதாக பலரும் கூறியுள்ளனர்.
இது ராஜபக்ஷ குடும்பத்திற்கு மற்றுமொரு பாரிய அடியாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post