சிறிலங்காவுக்குத் திரும்ப வேண்டும் என்று முன்னாள் பிரதமரும், சகோதருமான மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதிலளிக்க மறுத்துள்ளார் என்று அறிய முடிகின்றது.
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி சிறிலங்காவில் எழுந்த கடும் எதிர்ப்பால் பதவி விலகிய கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறினார். அதன்பின்னர் சிங்கப்பூரில் தங்கியிருந்த அவர் தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார்.
இந்தநிலையில் கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்ப வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்புக்கு கோட்டாபய ராஜபக்ச பதில் எதுவும் வழங்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாகச் சிறிலங்காவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் ராஜபக்ச குடும்பத்தினரிடையே எழுந்துள்ள மனக்கசப்பே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகின்றது.
Discussion about this post