மலையகத்தில் இருந்து ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்து போட்டிகளுக்கான நடுவராக கடமையாற்றும் வாய்ப்பை பெற்று ஜப்பான் சென்றுள்ளார் ஆசிரியை செல்வி ராஜேந்திரன் அகல்யா. மலையகம் சார்பிலும் முழு இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் சார்பிலும் இவர் இப்போட்டியில் நடுவராக கடமை ஆற்றுவது என்பது தமிழர்களுக்கும் இலங்கைக்கும் பெருமை தரும் விடயமாகும் .
செல்வி ராஜேந்திரன் அகல்யா (வயது 35 ) பதுளை மாவட்டத்தில் உள்ள பாசறை மத்திய மகாவித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியை என்பதுடன் இவர் ஒரு தகுதிவாய்ந்த மென்பந்து தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆவார் .
இவர் ஆசிய மென்பது அமையத்தினால் 2014 இல் நடாத்தப்ப ட்ட மென்பது தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் நடுவருக்கான தேர்வில் பங்கு கொண்டு A தர சித்தி பெற்றார் என்பதுடன் புள்ளிகளின் அடிப்படையில் இரண்டாம் நிலையை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இவர் இலங்கையில் பல மென்பது போட்டிகளுக்கு நடுவராக கடமையாற்றியது மட்டுமல்லாமல் வுஹான் சீனாவில் 2017, மலேசியா 2018 , அவுஸ்திரேலிய கமென் வெல்த் 2018 போன்ற போட்டிகளுக்கு நடுவராக கடமையாற்றியதுடன் 2019 இல் HSBC வழங்கிய சீன பயணத்திலும் பங்கு கொண்டார் .
இவர் பாடசாலையில் கல்வி கற்க்கும்போது கூடைப் பந்து, மென்பது, கரப்பந்து, கபடி மற்றும் ஏனைய விளையாட்டுக்களிலும் வலயம் மற்றும் மாகாணம் வரை வெற்றியீட்டியிருக்கின்றார்.
இவர் ஊவா தேசிய கல்வியியற்கல்லூரியில் தனது மூன்று வருட பயிற்சியை ஆங்கில மொழியில் நிறைவு செய்து 2010 இல் தனது ஆசிரிய தொழிலை பதுளையில் அமைந்துள்ள பசறை தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தொடந்து வருகிறார் என்பது அனைவருக்கும் ஒரு எடுத்து காட்டு என்பதுடன் பாராட்டுக்குரிய விடயமாகும் .
Discussion about this post