மலேசியா செல்லும் வெளிநாட்டு பயணிகள் நிச்சயமாக மின்னிலக்க வருகை அட்டையை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவுக்கு செல்லும் அனைத்து வெளிநாட்டினரும் டிசம்பர் 1ம் திகதி முதல் கட்டாயமாக நிரப்பி இருக்க வேண்டும் என மலேசிய குடிநுழைவுத்துறை முகநூல் பக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மலேசிய நிரந்தர குடிவாசிகள், மலேசிய தானியக்க குடிநுழைவு முறை அட்டைதாரர்கள் மற்றும் குடிநுழைவு நடைமுறையை நிறைவேற்ற தேவையில்லாத சிங்கப்பூரில் இருந்து மலேசியா வழியாக இடைவழிப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த புதிய நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக குடிநுழைவு துறையின் மலேசிய மின்னிலக்க வருகை அட்டை பிரிவின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தங்கள் பெயர், நாட்டுரிமை, கடப்பிதழ் விவரம் போன்ற அடிப்படை விவரங்களை மின்னிலக்க இணையப்பக்கத்தில் மலேசியா வருவதற்கு 3 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும் என அதன் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு ஜனவரியில், ஜோகூர் பாருவில் இருக்கும் இரண்டு தரைவழி சோதனைச் சாவடிகளிலும் சிங்கப்பூர் வாசிகள் இந்த மின் நுழைவு வசதியை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மலேசியாவின் மின்னிலக்க வருகையை அட்டை முன்னரே நிரப்பி இருக்க வேண்டும்.
Discussion about this post