மலேசியாவின் செந்தூல் கீழ்க்கோவில் கிராமம் பகுதியில் பெர்ஹெண்டியன் தெருவில் இலங்கையர்கள் மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோலாலம்பூர் காவல் துறை தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் அறிவித்துள்ளனர்.
“செந்தூல் பகுதியில் உள்ள இலங்கை தம்பதியருக்கு சொந்தமான வீடொன்றில் நேற்று முன்தினம் (22.09.2023) இரவு 11 மணியளவில் குறித்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் குத்தகைக்கு தங்கியிருந்த தம்பதியரும் அவர்களது 20 வயதுடைய மகனும் இரண்டு இலங்கையர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிற்கு சுமார் 02 நாட்களுக்கு முன்னர் மேலும் இரு இலங்கையர்கள் வந்திருந்த நிலையில் அவர்கள் இந்தக் கொலைகளை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மலேசிய பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அக்கம்பக்கத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீட்டுக்கு வந்த பொலிஸார், தலை பிளாஸ்திக் பைகளால் மூடப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் மூவரின் சடலங்களையும் கண்டெடுத்துள்ளனர்.
இரண்டு இலங்கையர்களின் புகைப்படங்களையும் பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் மற்றும் கொலையை செய்தவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Discussion about this post