மலாவி(Malawi ) நாட்டின் துணை ஜனாதிபதி Saulos Chilima பயணித்த விமானம் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
குறித்த விமானத்தில் துணை ஜனாதிபதியுடன் மேலும் 9 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைநகர் Lilongwe-இலிருந்து நேற்று(10) காலை புறப்பட்ட மலாவி பாதுகாப்பு படை விமானம், ரேடர் கண்காணிப்பிலிருந்து விடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மலாவி ஜனாதிபதி Lazarus Chakwera தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி Saulos Chilima பயணித்த விமானம் காணாமல் போனமையாலும் அதற்கான காரணம் கண்டறியப்படாததாலும் தமது பஹாமஸுக்கான பயணத்தை மலாவி ஜனாதிபதி Lazarus Chakwera இரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post