பிப்ரவரி மாதம் என்றதுமே பெரும்பாலானவர்களின் நினைவுக்கு வருவது காதலர் தினம் தான், பிப்ரவரி 14ம் திகதியை காதலர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.
அன்றைய தினத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை வெளிப்படுத்த பரிசுகளை கொடுப்பது வழக்கமே.
பரிசுப்பொருளானது என்றென்றும் நீங்கா நினைவுடன் துணைக்கு பிடித்தமாதிரியாக இருக்க வேண்டும்.
பலருக்கும் என்ன கொடுக்கலாம் என்பதில் குழப்பம் நீடிக்கலாம், இந்த பதிவில் என்னென்ன பொருட்களை கொடுக்கலாம், எதை கொடுக்கக்கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பெண்களுக்கு மோதிரம் பிடிக்கும் என்பதால் மோதிரத்தை பரிசளிக்கலாம், விரைவில் திருமணம் என்ற அர்த்தத்திலும் அப்பரிசினை வழங்கலாம்.
இதுதவிர வாசனை திரவியங்கள், கைகளை அலங்கரிக்கும் வாட்ச், ரோஸ் லேம்ப் என வசீகரமான பொருட்களையும் வழங்கலாம்.
வெறும் பரிசாக மட்டுமல்லாமல் கேண்டில் லைட் டின்னரும் உங்கள் துணையை சந்தோஷப்படுத்தும், காதலுடன் அவர்களுக்கு பிடித்த உணவை ஊட்டிவிட்டும் அன்பை வெளிப்படுத்தலாம்.
இது ஒருபுறம் இருக்க கொடுக்கக்கூடாத பரிசுகள் பற்றியும் தெரிந்து கொள்வோம், தாஜ்மஹால் காதலின் சின்னமாக இருந்தாலும் அது மும்தாஜின் கல்லறை என்பதால் தாஜ்மஹாலை கொடுக்க வேண்டாம் என சொல்லப்படுகிறது.
கைக்குட்டை வழங்குவதும் கசப்பை ஏற்படுத்துமாம், இது போன்று காலணிகளும் எதிர்மறையாக பார்க்கப்படுவதால் பரிசாக அளிக்க வேண்டாம் என சொல்லப்படுகிறது.
மிக முக்கியமாக கருப்பு நிற ஆடைகள் கொடுப்பதையும், அணிவதையும் அன்றைய நாளில் தவிர்த்து விடுங்கள்.
Discussion about this post