மருந்துகளின் பற்றாக்குறையால் நாடளாவிய ரீதியில் மருத்துவமனைகளின் ஆய்வுகூட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.
லேடி ரிஜ்வே மருத்துவமனை உட்பட நாட்டின் பிரதான மருத்துவமனைகள் தொடர்ந்தும் அன்டிபயோட்டிக்ஸ் மற்றும் வலி நிவாரணிகள் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன என தெரிவித்துள்ள அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வாசன் ரட்ணசிங்கம் பஞ்சு போன்றவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
சில மருத்துவமனைகள் சாதாரண சத்திரகிசிச்சைகள் தொடர்பாக மட்டும் கவனம் செலுத்துகின்றன. சில மருத்துவமனைகள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான சத்திரகிசிச்சைகளை மேற்கொள்கின்றன. முற்றாக சத்திரகிசிச்சைகளை ஒத்திவைக்காத அதேவேளை அவசர சத்திர கிசிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கை மருந்துகள் விநியோக பிரிவில் போதியளவு பொருள்கள் இன்மையே பற்றாக்குறைக்குக் காரணம். பற்றாக்குறைகள் உள்ளபோதிலும் கொழும்பு லேடி ரிஜ்வே மருத்துவமனை தொடர்ந்தும் இயங்குகின்றது. சிலவகை மருந்துகளை கேட்டால் அவை மருந்துகள் விநியோக பிரிவில் இல்லாத நிலை காணப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post