நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாடு காரணமாக அடுத்த சில வாரங்களில் நாட்டின் சுகாதாரத்துறை பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்மறையான நிதி முறைமையால் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமேல் மாகாண இணைப்பாளர், மருத்துவர் இந்திக ரத்நாயக்க தெரிவித்தார்.
டொலர் பற்றாக்குறையால் மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாதுள்ளது என்று தெரிவித்துள்ள அவர், நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் மருத்துகளை இறக்குமதி செய்வது மேலும் சிக்கல் நிலையையே அடையும் என்றும், மருந்துகளுக்கு அதிக தேவை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post