நாட்டுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 7 நாடுகளுடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
‘இந்தியா, பங்களாதேஷ் இந்தோனேசியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோரிக்கைக்கு அந்த நாடுகளிடமிருந்து ஏற்கனவே வெற்றிகரமான பதில் கிடைத்துள்ளது. மேலும், இந்தியக் கடன் சலுகைகளின் கீழ் மருந்துப் பொருள்கள் கிடைக்கப் பெற்று வருகின்றன.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இலங்கைக்கு மருந்துகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்’ என்றார்.
Discussion about this post