தங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டதால் ஒட்டுமொத்த மருத்துவ உலக மாபியாக்களும் தன்னை குறிவைக்க தொடங்கினார்கள் என யாழ் போதனா வைத்தியசாலையின் முன்னாள் திடீர் மரணவிசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்க்காணலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “வைத்தியசாலையில் நடக்கும் அனைத்து குற்றச்செயல்களையும் வெளிக்கொண்டுவரத் தொடங்கினேன்.அதனால் வைத்தியசாலையில் உள்ளவர்கள் தங்களது வேலைக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்து, நீதியமைச்சிடம் முறையிட்டார்கள்.தன்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, நீதியமைச்சுக்கு அழுத்தம் கொடுத்து பதவியிலிருந்து விலக்கினார்கள்.நான் பிணவறையில் இருந்த இளவயது பெண்ணோடு தகாத முறைக்குட்படுத்தியதாகவும் இவ்வாறான 37 வகையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வட மாகாண வைத்திய சங்கம் கடிதம் எழுதினார்கள்.இதன் பின்னணியில் யாழ் போதனை வைத்தியசாலையின் வைத்தியர் சத்தியமூர்த்தி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
Discussion about this post