Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மருத்துவருக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல்

April 26, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மருத்துவருக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

மருத்துவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்து புத்தூர் ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் மருத்துவ சேவைகளை
இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குழு ஒன்றினால் மருத்துவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதுடன் அவரது அலுவலகத்துக்கும் சேதம்
விளைவித்தமை தொடர்பில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தவறியதை அடுத்தே இந்த தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 10ஆம் திகதி புத்தூர் சந்தியில் அமைக்கப்பட்ட சாந்தி நிலையத்தில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு பெரிய
சத்தமாக பாடல்கள் இசைக்கப்பட்டுள்ளன. அதனால் தமது சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதாக மருத்துவர், தாக
சாந்தி நிலைய ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மருத்துவரின் கருத்தை பொருட்படுத்தாத அவர்கள் தொடர்ச்சியாக பெரிய சத்தமாக பாடல்களை
இசைக்கவிட்டுள்ளனர். அதன் பின்னர் குழு ஒன்று மருத்துவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில்
செயற்பட்டதுடன், அவரது அலுவலகத்துக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே புத்தூர் ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் மருத்துவ
சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த வேண்டும், அங்கு
பணியாற்றும் ஊழியர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னரே புத்தூர் ஆரம்ப சுகாதார பராமரிப்பு
பிரிவின் மருத்துவ சேவைகளை மீள ஆரம்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தச் சம்பவம்
தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண நிர்வாகம் காவல்துறை உயர்மட்டத்துக்கு
அறிவித்துள்ளது.

Tags: #DoctorThreateing#Hospital#police#Puttur#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

பிரபல நடிகருடன் டேட்டிங் சென்ற தமன்னா (வீடியோ)

Next Post

நடிகர் திலகம் சிவாஜி வைத்த மா மரம்; யாழில் உருகி நின்ற மகன் ராம் குமார்!

Next Post
நடிகர் திலகம் சிவாஜி வைத்த மா மரம்; யாழில் உருகி நின்ற மகன் ராம் குமார்!

நடிகர் திலகம் சிவாஜி வைத்த மா மரம்; யாழில் உருகி நின்ற மகன் ராம் குமார்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.