கம்பஹா மருத்துவமனையில் இன்று சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்த இளைஞர்கள் இருவர் மாயமாகியுள்ளனர்.
கார் ஒன்றில் அழைத்து வரப்பட்ட சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்து இளைஞர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினர். சுமார் 15 வயது மதிக்கத்தக்க அந்தச் சிறுமியின் உடலிலும் முகத்திலும் காயங்கள் இருந்தன என்று கூறப்படுகின்றது.
சிறுமியை சேர்ப்பித்தவர்களிடம் விசாரணை முற்பட்டபோது அவர்கள் காரில் மருத்துவமனை வளாகத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
மருத்துவமனை பாதுகாப்புக் கமராப் பதிவுகளை வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று மருத்துவமனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post