யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மருத்துவ பீட அடையாள அட்டை எனத் தெரிவித்து போலி அடையாள அட்டையைக் காண்பித்து ஏமாற்றிய குற்றச்சாட்டில் இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் மருத்துவபீட மாணவி என்று தெரிவித்து, போலி அடையாள அட்டையைக் காண்பிடித்து இந்த யுவதி, யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியுள்ளார்.
யுவதியின் நடவடிக்கைகளில், நடத்தைகளில் சந்தேகம் கொண்ட வீட்டு உரிமையாளர் இது தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
அதையடுத்து கோப்பாய் பொலிஸார் அந்த இளம் யுவதியிடம் மேற்கொண்ட விசாரணைகளில், யுவதி காண்பித்த அடையாள அட்டை போலியானது என்று கண்டறியப்பட்டது.
அந்த யுவதி மருத்துவபீட மாணவி இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸார் அந்த இளம் யுவதியைக் கைது செய்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இளம் யுவதியைப் பொலிஸார் முற்படுத்தியபோது, யுவதியை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Discussion about this post