ஹெரோயின் போதைப்பொருள் , தேசிய அடையாள அட்டைகள், வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன் நேற்றைய தினம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வயங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெயாங்கொட மாரபொல பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
1 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின், 6 தேசிய அடையாள அட்டைகள், 5 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் 8 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
விசாரணையில் சந்தேகநபர் தனது வீட்டை ஒட்டியுள்ள வனப்பகுதியில் உள்ள பெரிய மரத்தின் உச்சியில் மரத்தடிகள் மற்றும் பலகைகளால் ஆன பரணை அமைத்து யா போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
பணத்தை பையில் போட்டு கயிறு மூலம் மேலே அனுப்பினால் , மேலிருந்து போதைப்பொருளை கயிறு வழியாக இறக்கி விற்பனையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
பரணிலிருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளை பரவலாக அவதானிக்க முடிவதாகவும், வெளியாட்கள் நடமாட்டம். பொலிஸ் நடமாட்டம் என்பவற்றை அங்கிருந்தே அவதானித்து குறித்த பெண் செயற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
Discussion about this post