சந்திரமுகி 2 படத்தை பார்த்து விட்டு எனக்கு தூக்கமே வரவில்லை என்று இசையமைப்பாளர் கீரவாணி தெரிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்த படத்திற்கு இமையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், அவர் முதல் விமர்சனத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், சந்திரமுகி 2 படத்தை பார்த்து விட்டு எனக்கு தூக்கமே வரவில்லை. அதில் வரும் கதாபாத்திரங்கள் என்னை மரண பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக தூக்கம் இல்லாமல் இரவு, பகல் பாராமல் படத்தின் பிரம்மிக்க வைக்கும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை ஏற்பை ஏற்படுத்தியுள்ளது
Discussion about this post