மரக்கறி தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் பொகவந்தலாவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ காவல் பிரிவிற்குட்பட்ட மரக்கறி தோட்டத்தில் சிலர் பாரிய குழிகள் தோண்டி சுற்றுச்சூழலை நாசம் செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொகவந்தலாவ காவல்துறையினர் சுற்றிவளைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இரத்தினக்கல் அகழ்வு
இதனடிப்படையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பலாங்கொடை, எல்பிட்டிய மற்றும் அனுராதபுரத்தை வசிப்பிடமாகக் கொண்ட 34 தொடக்கம் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன் பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்படும் ஒருவரின் பின்புலத்திலேயே இந்த சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் இரத்தினக்கல் அகழ்வதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை அட்டன் நீதவான் நீதிமன்றில் மன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post