மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக பொருளாதார மத்தியை நிலையங்களின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பெய்து வரும் மழை காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைக்கும் மரக்கறிகள் தரமும் குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமையாக ஏனைய பொருட்களை போன்று மரக்கறிகள் விலைகளும் அதிகரித்தன.
உரப்பற்றாக்குறை மற்றும் ஏனைய கட்டணங்களில் ஏற்பட்ட மாற்றத்தினால் கடந்த காலங்களில் மரக்கறிகள் விலையில் பாரிய அதிகரிப்பு காணப்பட்டது.
இதன்படி, அனைத்து மரக்கறிகளும் 400 ரூபா முதல் ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.
இந்த பின்னணியில் தேசிக்காய் கிலோ கிராம் ஒன்று 1000 ரூபா வரையிலும், பச்சை மிளகாய் 800 முதல் 1000 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், மரக்கறிகளின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், மெனிங் சந்தை மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களின் விலைகளை ஒப்பிட்டு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென நுகர்வோர் முன்னணி அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தது.
Discussion about this post