நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளின் விலைகள் இன்று (2024.02.08) காலை முதல் குறைவடைய ஆரம்பித்துள்ளது.
கடந்த காலங்களில் நுவரெலியாவில் நிலவி வந்த மரக்கறி வகைகளின் தட்டுப்பாடுகள் படிப்படியாக குறைந்து வருகின்றது.
அதேநேரத்தில் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து வெளிமாவட்ட பொது சந்தைகளுக்கு நுவரெலியா மரக்கறிகள் கொண்டு செல்லப்படும் மரக்கறிகளின் அளவும் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், விலைச்சரிவு ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலய முகாமையாளர் ஆர்.எம். பண்டார தெரிவித்தார்.
அவ்வகையில் நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் இன்று வெளியிட்டுள்ள மரக்கறிகளின் மொத்த விற்பணை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கோவா 370 ரூபாய், கரட் 650 ரூபாய், லீக்ஸ் 370 ரூபாய்,ராபு 90 ரூபாய், இலை வெட்டா பீட் 350 ரூபாய், இலை வெட்டிய பீட் 440 ரூபாய், உருளை கிழங்கு 31.0 ரூபாய், சிவப்பு உருளை கிழங்கு 340 ரூபாய், நோக்கோல் 370 ரூபாய் என அறிவித்துள்ளது.
மேலும் நுவரெலிய பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள மரக்கறி வகைகளின் விலைக்கு அப்பால் வெளி மாவட்ட சந்தைகளுக்கு மற்றும் வியாபாரிகளுக்கு விற்பணை செய்யப்படும் மரக்கறிகளின் விலைகளை அதிகரித்து விற்பணை செய்யப்படுவதாக வெளி மாவட்ட வர்த்தகர்கள் குற்றம் சுமத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post