மன்னார் – முருங்கன் பகுதியில் வேன் விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் 72 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த வேன் பாதையை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் 4 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் உள்ளிட்டோர் வேனில் பயணித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த அனைவரும் முங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போது குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றர்
Discussion about this post