மன்னார் துறைமுக முனைய நிர்மாணப் பணிகளுக்கான விலைமனு கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மன்னார் துறைமுகத்தில் 300 மீட்டர் நீளமான முனையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் K.D.S. ருவன்சந்திர தெரிவித்தார்.
இதற்காக உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
முனையத்தின் நிர்மாணப் பணிகளின் பின்னர் இந்தியா – இலங்கைக்கு இடையில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கான வசதிகள் இலகுவாக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
மன்னார் துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக அறிவித்து அரசாங்கத்தினால் வர்த்தமானி வௌியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post