தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர் மட்டுமின்றி குணச்சித்திர மற்றும் காமெடி நடிகராகவும் வலம் வந்த மனோ பாலா சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.
இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ஆஞ்சியோ செய்யப்பட்டிருந்தது. பின்பு கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தவர் வீட்டில் இருந்து சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
ஆனால் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியடைய செய்ததோடு, பல முன்னணி நடிகர், நடிகைகளும் நேரில் இரங்கல் தெரிவித்தனர்.
நடிகர் மனோ பாலா பார்ப்பதற்கு பயங்கர ஒல்லியாக இருந்தாலும், பயங்கர சுறுசுறுப்பாகவே செயல்பட்டு ரசிகர்களை கவர்ந்தவர். ஆனால் இவரைக் குறித்து தற்போது சினிமா விமர்சகர் பயில்வான் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பயில்வான் கூறுகையில், 85 வயது வரை வாழ வேண்டிய மனிதர் மனோபாலா தற்போது 69 வயதிலேயே உயிரிழக்க அவரது குடிப்பழக்கம் தான் காரணம் என்று கூறியுள்ளார். தனக்குத் தெரிந்து அவர் 30 வருடங்களாக மதுவுக்கு அடிமையாக இருந்ததாகவும், மதுவைக் குறித்து என்னதான் பிரசாரம், போராட்டம் நடத்தினாலும் மக்களுக்கு சென்றடைவதில்லை.
தற்போது சாவுக்கும் மது, கல்யாணத்திற்கும் மது என்றும், இவ்வாறு குடியால் உடல்நலம் பாதித்து உயிரிழப்பது கேவலமான விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post