இந்த காட்டாட்சியை நாம் முன்னோக்கி சென்று, வீழ்த்த வேண்டும் என்றால்
முரண்பாடுகளை மறந்து சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும்
கரங்கோர்க்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி ஆசைப்படுகின்றது என
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப பகுதியில் உள்ள ஊழல்
எதிர்ப்பு குழு அங்கத்தவர்களை விசாரிக்கும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின்
முன் சாட்சியம் அளித்து விட்டு, ஊடகங்களிடம் பேசிய மனோ கணேசன்
எம்பி மேலும் கூறியதாவது, வழமையாக அரசாங்கங்கள் பதவிக்கு வந்த பின்னர்
அது விழும். அதையடுத்து புதிய அரசாங்கம் பதவிக்கு வரும். அதுவும் விழும்.
இதுவே வழமை. ஆனால், இன்று அரசாங்கம் விழுவதற்கு
முன் நாடு விழுந்து விட்டது. அண்டை நாடுகளிடம் கெஞ்சி கூத்தாடி கைமாற்று
வாங்கி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, பெருங்கடன்களின் மீள் செலுத்தும்
தொகையை செலுத்தி காலத்தை ஓட்டும் நிலைமைக்கு நாடு விழுந்து விட்டது
என கூறினார்
Discussion about this post