கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கத்தி வெட்டில் முடிந்ததில் கணவனும், மனைவியும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொடிகாமத்தில் நடந்துள்ளது.
மீன் வெட்டிக் கொண்டிருந்த மனைவியிடம், மீன் வெட்டும் முறை தொடர்பில் குறைகூறியுள்ளார் கணவர். அது அவர்களிடையே வாய்த்தர்க்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கட்டத்தில் வாய்த்தர்க்கம் முற்றி, கணவன் மனைவியைக் கத்தியால் வெட்டியுள்ளார். ஆத்திரமடைந்த மனைவி கத்தியைப் பறித்து கணவரை வெட்டியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தற்போது சாவகச்சேரி மருத்துவமனயைில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Discussion about this post