மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களுக்கு மக்கள் அனுப்பப்படுவது அதிகரித்து வருவதாக அந்நாட்டு தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு எச்சரித்துள்ளது.
இந்த ஆள் கடத்தல்கள் தகவல் தொழில்நுட்ப அறிவு கொண்ட நிபுணர்களை குறிவைத்து நடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாய்லாந்து போன்ற நாடுகளில் அதிக சம்பளம் தரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாங்கித் தருவதாக இளைஞர்கள் மற்றும் பெண்களை ஏமாற்றி, துபாய்க்கு அழைத்துச் சென்று எல்லை தாண்டி மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களுக்கு கடத்துவது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post