ஆப்கானிஸ்தான் மக்களுக்கு வரையறுக்கப்பட்ட அடிப்படையில் மட்டுமே உதவ முடியும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஆப்கான் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுவதில் வரையறைகளுக்கு உட்பட்டே உதவ முடியும் என தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முர்சால் நாபிஸாடா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ஆப்கான் ஏதிலிகளுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென கோரப்பட்டு வருகின்றது.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த எட்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை கனடாவிற்கு அழைத்து வருமாறு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரி வருகின்றனர். எனினும், தலிபான்கள் இந்தக் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தானை விட்டு அந்நாட்டு மக்கள் வெளியேறுவதனை தலிபான்கள் தடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
Discussion about this post