மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது என்று தெரியவந்துள்ளது.
நந்தலால் வீரசிங்கவுக்குப் பதிலாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட உள்ளார்.
இந்திரஜித் குமாரசுவாமி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
அதேவேளை, பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்த நிலையில், ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.
Discussion about this post