இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையைத் தாம் ஏற்றுக்கொண்டுளேன் என்று சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கலாநிதி நந்தலால் வீரசிங்க, இலங்கை மத்திய வங்கியில் பிரதி ஆளுநராகக் கடமையாற்றிய அனுபவம் கொண்டவர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால் சில தினங்களுக்கு முன்னர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.
அதையடுத்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்துக்கே கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமனம் செய்யப்படவுள்ளார்.
Discussion about this post