லெபனானில் பேஜர் வாக்கி – டாக்கிகளை வெடிக்க வைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல் “பயங்கரவாத செயல்” என ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா கடுமையாக சாடியுள்ளார்.
லெபனான் மக்களுக்கும் நாட்டின் இறையாண்மைக்கும் எதிரான “போர் அறிவிப்பு” என்றும் இஸ்ரேல் போர்க் குற்றம் செய்துள்ளது என்றும் ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்களுக்குப் பின்னர் வழங்கிய தொலைக்காட்சி உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்
தொடர்ந்து உரையாற்றிய ஹிஸ்புல்லா தலைவர், லெபனான் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்த சூழலில் நாம் உள்ளோம் என்பதில் சந்தேகமில்லை.
இது மாதிரியான தாக்குதலை உலகம் எதிர்கொண்டிருக்க வாய்ப்பில்லை. இந்தத் தாக்குதல் அனைத்து எல்லைகளையும் அத்துமீறி கடந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிரி தரப்பான இஸ்ரேல் அனைத்து நெறிகள், சட்டங்களுக்கு அப்பால் சென்று அரங்கேற்றியுள்ள போர்க் குற்றம் இது. எதையும் பொருட்படுத்தாமல் இதனை இஸ்ரேல் செய்துள்ளது.
இந்தப் படுகொலை சம்பவம் லெபனான் மற்றும் அதன் மக்கள் மீதான தாக்குதல். அதுதான் எதிரியின் நோக்கமும் கூட என ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post